Thursday, September 26, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

தமிழ் எழுத்துக்கள்
எழுத்துக்களைக் கொண்டு சொற்களை ஆக்குகின்றோம். எழுத்துக்கள் ஒலியன்கள் எனப்படும். தமிழ் மொழியில் முதல் எழுத்துக்கள் முப்பது (30) உள்ளன.
அவை இரண்டு வகைப்படும்.
1. உயிர் எழுத்துக்கள் - 12
2. மெய் எழுத்துக்கள் - 18

உயிர் எழுத்துக்கள் 
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஓ, ஒள

மெய் எழுத்துக்கள்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
உயிர் எழுத்துக்கள் இரு வகைப்படும்.
1. குற்றெழுத்துக்கள் - 5
2. நெட்டெழுத்துக்கள் - 7

குற்றெழுத்துகக்கள்(குறில்)
அ, இ, உ, எ, ஓ

நெட்டெழுத்துக்கள்(நெடில்)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும்
1. வல்லெழுத்துக்கள் - 6
2. மெல்லெழுத்துக்கள் - 6
3. இடையெழுத்துகள் - 6

வல்லெழுத்துக்கள் (வலியஓசை)
க், ச், ட், த், ப், ற் (கசடதபற)

மெல்லெழுத்துக்கள் (மெலிய ஓசை)
ங், ஞ், ண், ந், ம், ன் (ஙஞணநமன)

இடையெழுத்துக்கள் (இடையின ஓசை)
ய், ர், ல், வ், ழ், ள் (யரலவழள)

உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் புணர்ந்து உயிர் மெய் எழுத்துக்கள் உண்டாகின்றன.
உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 ஆகும்.
ஆயுத எழுத்துக்களின் எண்ணிக்கை 1 ஆகும்  - ஃ
எனவே தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 247 ஆகும்.

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

ஒத்தகருத்துள்ள சொற்கள் - தொடர் - 4

01. வியாதி - நோய்
02. தூய்மை - சுத்தம்
03. உறுமால் - தலைப்பாகை
04. பெண்டீர் - பெண்கள்
05. சாலவும் - மிகவும்
06. உண்டி - உணவு
07. ஈயார் - கொடார்
08. போர் - யுத்தம்
09. மதி - சந்திரன்
10. அடவி - காடு
11. வெய்யோன் - சூரியன்
12. அரண் - கோட்டை
13. சிகரம் - மலை
14. குட்டை - குளம், பொய்கை
15. திலகம் - பொட்டு
16. வதனம் - முகம்
17. நுதல் - நெற்றி
18. உடல் - சரீரம்
19. வளி - காற்று
20. கோன் - அரசன்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

ஒத்தகருத்துள்ள சொற்கள் - தொடர் - 3

01. ஆகாயம் - வானம்
02. திருடன் - கள்வன்
03. செல்வன் - பணக்காரன்
04. சக்கரம் - சில்லு
05. அருவி - ஆறு
06. அகம் - உள்ளம்
07. வாஞ்சை - விருப்பம்
08. வண்ணம் - நிறம்
09. பிரியம் - விருப்பம்
10. நெஞ்சம் - உள்ளம்
11. ஒலி - சத்தம்
12. குதூகலம் - பெருமகிழ்ச்சி
13. ஈகை - கொடை
14. ஊண் - உணவு
15. ஓளடதம் - மருந்து
16. தொன்மை - பழைமை
17. மிடி - வறுமை
18. வீரியம் - வலிமை
19. வெளவுதல் - திருடுதல்
20. சோதரர் - சகோதரர்

Wednesday, September 25, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

ஒத்தகருத்துள்ள சொற்கள் - தொடர் - 2

01. உண்மை - மெய்
02. உடை - ஆடை
03. பணம் - நிதி
04. பாவை - பொம்மை
05. வைதல் - ஏசுதல்
06. வீடு - இல்லம்
07. பிளவு - பிரிவு
08. தோழர் - நண்பர்
09. கை - கரம்
10. ஆவி - உயிர்
11. கலம் - பாத்திரம்
12. நேயம் - அன்பு
13. பொல்லாங்கு - குற்றம்
14. கடல் - சமுத்திரம்
15. காரியம் - செய்கை
16. இணங்கல் - சம்மதித்தல்
17. அல்லல் - துன்பம்
18. மாற்றான் - பகைவன்
19. இறைவன் - கடவுள்
20. ஆசிரியர் - உபாத்தியாயர்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

ஒத்தகருத்துள்ள சொற்கள் - தொடர் - 1

01. கோயில் - ஆலயம்
02. திருமணம் - கலியானம்
03. அழகாய் - வாகாய்
04. அரசன் - மன்னன்
05. கர்வம் - செருக்கு
06. பழம் - கனி
07. மகிழ்ச்சி - ஆனந்தம்
08. சினம் - கோபம்
09. திரை - அலை
10. தரை - நிலம்
11. இரை - உணவு
12. பறி - கூடை
13. கரை - ஓரம்
14. பிராணி - உயிரி
15. நாட்டியம் - நடனம்
16. கொட்டகை - பந்தல்
17. பாட்டு - பாடல்
18. அம்மா - தாய்
19. சிந்தனை - யோசனை
20. நாடு - தேசம்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

எதிர்க்கருத்துள்ள சொற்கள் - தொடர் - 3

01. ஆண்டான் - அடிமை
02. இம்மை - மறுமை
03. இளைஞர் - முதியோர்
04. இன்சொல் - வன்சொல்
05. ஈதல் - ஏற்றல்
06. உதயம் - மறைவு
07. குறைவு - நிறைவு
08. ஐக்கியம் - பிளவு
09. ஏற்றம் - இறக்கம்
10. உறக்கம் - விழிப்பு
11. உலோபி - வள்ளல்
12. உருவம் - அருவம்
13. உறவு - பகை
14. இசை - வசை
15. ஒருமை - பன்மை
16. காடு - நாடு
17. அடி - நுனி
18. அடைத்தல் - திறத்தல்
19. கலகம் - அமைதி
20. சிறுவர் - முதியவர்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

எதிர்க்கருத்துள்ள சொற்கள் - தொடர் - 2

01. உண்டு - இல்லை
02. நாகரிகம் - அநாகரிகம்
03. ஒற்றுமை - வேற்றுமை
04. வறியவன் - பணக்காரன்
05. சந்தோஷம் - துக்கம்
06. பகைவர் - நண்பர்
07. இலாபம் - நட்டம்
08. ஆயுதன் - நிராயுதன்
09. பெருமை - சிறுமை
10. இளமை - முதுமை
11. பிறப்பு - இறப்பு
12. வெற்றி - தோல்வி
13. வீரன் - கோழை
14. புதுமை - பழைமை
15. ஏற்றுமதி - இறக்குமதி
16. இயற்கை - செயற்கை
17. தொடக்கம் - முடிவு
18. இருள் - வெளிச்சம்
19. வலம் - இடம்
20. அரசன் - ஆண்டி

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

எதிர்க்கருத்துள்ள சொற்கள் - தொடர் - 1

01. குளிர் - சூடு
02. பெரிது - சிறிது
03. மேடு - பள்ளம்
04. அழு - சிரி
05. துன்பம் - இன்பம்
06. முன் - பின்
07. மாரி - கோடை
08. விருப்பு - வெறுப்பு
09. நல்லது - கெட்டது
10. காலை - மாலை
11. பொய் - மெய்
12. முன்பு - பின்பு
13. அகம் - புறம்
14. சிறிது - பெரிது
15. நன்மை - தீமை
16. சுத்தம் - அசுத்தம்
17. சுறுசுறுப்பு - சோம்பல்
18. மெல்ல - விரைவாக
19. சிரிப்பு - அழுகை
20. இக்கரை - அக்கரை

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

எதிர்பால் சொற்கள்
01. பிதா - மாதா
02. தம்பி - தங்கை
03. மாமா - மாமி
04. பாட்டன் - பாட்டி
05. கணவன் - மனைவி
06. குருடன் - குருடி
07. சிறுவன் - சிறுமி
08. மகன் - மகள்
09. மாணவன் - மாணவி
10. தந்தை - தாய்
11. சகோதரன் - சகோதரி
12. வீட்டுக்காரன் - வீட்டுக்காரி
13. அப்பா - அம்மா
14. அவன் அவள்
15. அசிரியர் - ஆசிரியை
16. இடையன் - இடைச்சி
17. உத்தமன் - உத்தமி
18. உழவன் - உழத்தி
19. எசமான் - எசமானி(எசமாட்டி)
20. ஒருவன் - ஒருத்தி

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கானது

ஒத்தகருத்துள்ள சொற்கள்
01. பிற்பகல் - பின்னேரம்
02. வர்த்தகம் - வியாபாரம்
03. அண்மை - கிட்ட, அருகாமை
04. ஒளி - வெளிச்சம்
05. கவி - புலவன்
06. வீதி - தெரு
07. புத்தகம் - நூல்
08. பரண் - கடவுள்
09. பட்சணம் - சிற்றூண்டி
10. உட்கார்தல் - இருத்தல்
11. நாளிகை - கால அளவு
12. பறித்தல் - பிடுங்குதல்
13. இரதம் - தேர்
14. கிண்கிணி - காற்சதங்கை
15. வேடங்கள் - வெவ்வேறு கோலங்கள்
16. சூரியன் - கதிரவன், பகலவன்
17. சாப்பாடு - உணவு
18. ஏர் - கலப்பை
19. கிளைஞர் - நட்பினர், உறவினர்
20. நாளிதழ் - செய்தித்தாள்
21. பொழில் - பூஞ்சோலை
22. குடபால் - மேற்கு
23. குணதிசை - கிழக்கு
24. வெளிச்சம் - ஒளி
25. விளக்கு - தீபம்
26. படம் - சித்திரம், பிரதிமை
27. தோழன் - நண்பன்
28. செவி - காது
29. பார் - பூமி
30. தந்திரம் - உபாயம்